இஸ்ரேல் ஹமாஸ் போரில் காஸா எல்லையில் உயிரிழந்த இந்திய வம்சாவளி வீரர்

keerthi
0

 


இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேவருகிறது. 

இவ்வாறுஇருக்கையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இஸ்ரேல் இராணுவ வீரர் காஸா எல்லையில் நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆஷ்டோட்-ஐ சேர்ந்த 34 வயதான கில் டேனியல்ஸ் என்ற இந்தியரே கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போரில் உயிரிழந்துள்ளதோடு இவரின் இறுதி சடங்குகள் அவரின் சொந்த ஊரில் நடைபெற்றுள்ளது.

அத்தோடு, காஸா எல்லையில் நடைபெற்ற சண்டையின் போது கில் டேனியல்ஸ் உடன்  இருவர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய யூத பாரம்பரிய மையம்  கருத்து தெரிவிக்கையில், ஒட்டுமொத்த இஸ்ரேலுக்காக களமிறங்கிய கொடூரமான போரில் இஸ்ரேல் பல இராணுவ வீரர்களை இழந்துள்ளது. 

எனினும்   அந்த வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படையை சேர்ந்த இராணுவ வீரர் மாஸ்டர் கில் டேனியல்ஸ் (34) உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம்" என கூறியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top