வாகனங்கள் மீது அடுத்தடுத்து முறிந்து விழுந்த மரங்கள்: இருவர் வைத்தியசாலையில்

tubetamil
0

 கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் அடுத்தடுத்து வாகனங்கள் மீது முறிந்து விழுந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று (27.12.2023) காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அரச மரமும், மேலுமொரு மரமும் இவ்வாறு முறிந்து விழுந்துள்ளன.

வாகனங்கள் சேதம்

இந்த சம்பவத்தில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வான்கள், முச்சக்கரவண்டிகள் உட்பட எட்டு வாகனங்கள் சேதமடைந்துள்ளன.


அத்துடுன் காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த அனர்த்தம் காரணமாக வீதியின் போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டுள்ளது.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top