க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு

keerthi
0

 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையை ஜனவரி மாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும்    குறித்த பரீட்சைகள் எதிவரும் ஜனவரி 4ஆம் திகதி முதல் ஜனவரி 31ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்தோடு  நாடளாவிய ரீதியிலுள்ள 2,298 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

பரீட்சை கால அட்டவணைகள் மற்றும் அனுமதி அட்டைகள் என்பன பாடசாலை அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் தனிப்பட்ட முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk எனும் இணையத்தளத்தின் மூலம் தங்களின் உரிய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top