யாழில் நீதிமன்ற விசாரணையில் இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

keerthi
0

 


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் மது போதையில் விசாரணைக்கு இடையூறு செய்த பொலிஸ் உத்தியோகத்தரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் சம்பவம் இன்று(04.12.2023) மதியம் இடம்பெற்றுள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் துன்னாலை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சாட்சியமளிப்பதற்காக சென்றிருந்தார்.

இவ்வாறுஇருக்கையில் அவர் மதுபோதையில் நீதிமன்ற அமர்வில் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இதனால் அவரை கைது செய்த பொலிஸார் பருத்தித்துறை நீதவானிடம்  முன்னிலைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சந்தேக நபரை நாளைய தினம்  (05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் சந்தேக நபருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top