அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலையை குறைத்தது சதொச

keerthi
0




 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. 

10 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.  

மேலும்     இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த விலைக்குறைப்பு நடைமுறையில் இருக்கும்.

இதன்படி,  பால் மாவின் விலை 10 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்படும் டின் மீன் (425g) 55 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு கிலோ கிராம் உள்ளூர் மற்றும் இறக்குமதி செய்யப்படும் உருளை கிழங்கு 15 ரூபாயினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

  அத்தோடு    ஒரு கிலோ கிராம் சிவப்பு நாட்டு அரிசி 08 ரூபாவினால், வெள்ளை நாட்டு அரிசி 07 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் கொண்டைக் கடலையின் விலை 05 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top