நாட்டில் தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி

keerthi
0



நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் (06.12.2023) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 662,992.80 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இது சிறு வீழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 664,319 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்தோடு, 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,440 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை187,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 171,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,490 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,510 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 164,100 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

அத்தோடு ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top