பணத்திற்காக கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தர்

tubetamil
0

 நாத்தாண்டிய பிரதேசத்தில் பணத் தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரால் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் நாத்தாண்டிய, கடொல்கொடவத்தை பிரதேசத்தில் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதான சுதார சதுரங்க என்ற நாத்தாண்டிய, ஜனஹிதாகமப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.


கைது செய்ய நடவடிக்கை 

பலத்த வெட்டுக்காயங்களுக்குடன் மாரவில ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top