நத்தார் வாழ்த்தில் ஈஸ்டர் ஞாயிறை நினைவுகூரூம் சஜித்

tubetamil
0

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

பல வருடங்களாக இலங்கை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு மற்றும் கிறிஸ்மஸ் இரண்டையும் பாதிக்கப்பட்டவர்களாகவே அனுபவிக்கும் சூழ்நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் கண்டு இதுவரை தங்களுக்கு நீதி கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் சோகத்தில் தவித்து வருகின்றனர்.





மேலும் அவர் தனது செய்தியில் கூறியிருப்பதாவது: "அமைதியின் இளவரசர்' என்றும் அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவின் அற்புதமான பிறப்பை நினைவுகூரும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை, இறைவன், தனது மகனை உலகிற்கு அனுப்பியதை நினைவுகூரும் நாளாகும்.

"கிறிஸ்து இருள் சூழ்ந்த இதயங்களுக்கு நித்திய ஒளியை தந்தார். உலகிற்கு பகிர்தல் என்ற தலைசிறந்த பாடத்தை கற்றுத்தந்த இன்பமயமான நத்தாரை, கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி, உலக மக்கள் பலரும் இன, மத பேதமின்றி கொண்டாடுகின்றனர்.

"அன்பு, சகோதரத்துவம், ஆதரவற்றோருக்கு உதவுதல் என்ற செய்தியின் முழு அர்த்தத்துடன் வாழ்ந்தால் மட்டுமே கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியானது. சிறிய குடிசைகள் முதல் பெரிய வீடுகள் வரை மக்கள் தங்களால் இயன்ற விதத்தில் கிறிஸ்மஸைக் கொண்டாடுகிறார்கள்.

"கிறிஸ்துமஸின் செய்தி பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் அமைதியைக் கொண்டுவருவதாகும். கிறிஸ்மஸின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்துவதன் மூலம் உலகிற்கு விடுதலையின் செய்தியைக் கொண்டு வரும் உங்களுக்கு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! என சஜித் பிரேமதாச தனது கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியை பக்ர்ந்துள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top