ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்து சிதறியது: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

keerthi
0

 


ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. கிரின்டாவிக் நகரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த எரிமலை நேற்று இரவு ஆக்ரோஷத்துடன் வெடிக்க தொடங்கி தீப்பிழம்பை கக்கி வருகிறது. கடந்த ஒரு வாரமாக குமுறிக் கொண்டிருந்த நிலையில் நேற்று வெடித்து சிதறியுள்ளது.

தீப்பிழம்பு ஆரஞ்சு நிறத்தில் வெளியேறி வருகிறது. அத்தோடு எரிமலை வெடிப்பு காரணமாக கிரின்டாவிக் பகுதியில் வசிக்கும் 4 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் பாதுகப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

  அத்தோடு  சில நாட்களுக்கு முன்பு ரெய்க்ஜாவிக் தீபகற்பகத்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. எரிமலை வெடிப்புக்கு முன்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top