பெப்ரவரி 23 அன்று கச்சதீவு​ திருவிழா..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா  பெப்ரவரி மாதம் 23 ம் திகதி  இடம்பெறவுள்ளது. அதற்கான  முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று  செவ்வாய்க்கிழமை (16)  முன்னெடுக்கப்பட்டது.

இந்த விஜயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), நெடுந்தீவு பிரதேச செயலாளர் எப்.சி. சத்தியசோதி, யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர். 

குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு மூலம் கச்சதீவு சென்ற குழுவினர் அங்கு திருவிழாவிற்கு வரும் பக்தர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். 


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top