ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பிராந்தியத்தில் நேற்று சக்திவாய்ந்த
நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 மெக்னிடியூட்டாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிலும் உணரப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் - இந்துகுஷ் பகுதியில் இன்று அதிகாலை 4.51 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இது 4.3 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.