பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம்..!!

tubetamil
0

 வரலாற்றுச்சிறப்புமிக்க இணுவில் மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது


கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேய ருக்கும்,ஏனைய பாரிவாரதெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.


கடந்த 29.12 அன்று ஸ்ரீமத் ஆஞ்சநேய ஜெயந்தி இலட்சார்ச்சனைப்பெரு விழா ஆரம்பமாகி  09 நாளில்  இரதோற்சவமும், நாளை ஆஞ்சநேய ஜனனதின ஜெயந்தி இடம்பெற்று  ஜெயந்தி இலட்சார்ச்சனைப்பெருவிழா இனிதே நிறைவடையும்.

இரதோற்சவ கிரியைகளை இணுவில் மருதனார் மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஆதீனதர்மகர்த்தாஇ.சுந்தரேஸ்வரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் நடாத்திவைத்தனர்.
இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top