கட்டைக்காட்டில் இன்று டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு  கட்டைக்காட்டில் இன்று டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.


மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிஈவின் கட்டைக்காடு பொது சுகாதார பரிசோதகரின் ஒழுங்கு படுத்தலில் முள்ளியான் கிராம சேவையாளர் கி.சுபகுமார் தலமையில் ,குறித்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதில் முள்ளியான் சமுர்த்தி உத்தியோகஸ்தர் பாமினி, மரள
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் செ. நாகேந்திரம், கட்டைக்காடு பொது சுகாதார பரிசோதகர்  பொ. யோகராஜ், ந.நிரூபன், மற்றும் பொது சுகாதார பரிசோதகர் செ. மதுஜன்  உட்பட பலரும் கலந்து கொண்டு டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இல்லாதொழித்ததுடன் பலருக்கு சிவப்பு ஏச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளது.

முள்ளியான் கிராம சேவையாளர் பிரிவில் நேற்று ஒருவருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலையே இன்றைய தினம் இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பருத்தித்துறை பிரதேச சபையுடன் இணைந்து பொது  இடங்களில் காணப்படும் குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top