ராணுவ பலத்தில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

keerthi
0

 



குளோபல் பயர்பவர் அமைப்பு, உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டிலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.

துருப்புக்களின் எண்ணிக்கை, ராணுவ உபகரணங்கள், நிதி நிலைத்தன்மை, புவியியல் இருப்பிடம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட காரணங்களை கொண்டு 2024-ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையை வெளியிட்டுள்ளது. இதில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்து உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்டுள்ளது. 2-வது இடத்தில் ரஷியாவும் 3-வது இடத்தில் சீனாவும் உள்ளது.

மேலும்     இந்த தர வரிசையில் இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. தென்கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், துருக்கி, பாகிஸ்தான் இத்தாலி ஆகிய நாடுகள் முறையே 5 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

அதேபோல் உலகில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது. மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, பெலிஸ், சியரா லியோன், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே 2 முதல் 10-வது இடத்தில் உள்ளன.

குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top