கொட்டும் மழையில் திருட்டு ஒன்று மட்டும் மீட்பு..!!

tubetamil
0

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகி கிராமத்தில்,  வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மழை பெய்துகொண்டிருந்த நிலையில் திருடப்பட்டுள்ள சம்பவம்  திங்கட்கிழமை (08)  பதிவாகியுள்ளது.

களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று அருகில் உள்ள வீதி ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளதுடன் EP BDP- 3586 இலக்கமுடைய பல்சர் ரக மோட்டார் சைக்கிள் திருடர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்  கொள்ளையிடப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று இயங்க முடியாத நிலையில் கைவிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top