தமிழரசு கட்சியின் புதிய தலைவர் தெரிவிற்கான வாக்கெடுப்பு: சூடுபிடிக்கும் கள நிலவரம்

keerthi
0

 


இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பிற்கான ஆரம்ப கட்ட ஆயத்தங்கள் சூடுபிடித்து வருகிறதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இன்று (21.01.2024) நடைபெறும் குறித்த தேர்தலின் வேட்பாளர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகிய மூவரும் திருகோணமலை நகரசபை மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, சில கட்சி உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற காரணத்தினால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அத்தோடு, புதிய தலைவரை வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தமிழரசுக் கட்சி அண்மையில் தீர்மானித்திருந்தது.  

மேலும், தமிழரசுக் கட்சியின் வரலாற்றில் தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top