ஹூத்தி கிளர்ச்சியாளர் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்..!!

tubetamil
0


 யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்களை ‘பயங்கரவாத’ பட்டியலில் சேர்த்த அமெரிக்கா, அந்தக் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து நான்காவது சுற்று தாக்குதலை நடத்தியுள்ளது.

செங்கடலில் உள்ள கப்பல்களை தாக்குவதற்கு தயாராக இருந்த சுமார் 14 ஹூத்தி ஏவுகணைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

முன்னதாக ஹூத்தி கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து அமெரிக்காவுக்குச் சொந்தமான கப்பல் ஒன்றின் மீது கடந்த புதனன்று தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஏடன் வளைகுடா பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால் கப்பலுக்கு சில சேதங்கள் ஏற்பட்டபோதும் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாரத்தில் அமெரிக்கா தொடர்பிலான கப்பல் தாக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும். இதனை அமெரிக்க கப்பல் நிறுவனமான ஜென்கோவும் உறுதி செய்துள்ளது.

ஏடன் வளைகுடா வழியாகச் சென்றபோது தனது சரக்குக் கப்பல் தாக்கப்பட்டதாக அது கூறியது.

யெமனின் பெரும்பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான் ஆதரவு ஹூத்திக்கள் காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செங்கடலில் செல்லும் இஸ்ரேலுடன் தொடர்புபட்ட கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஹூத்திக்களை அமெரிக்க நிர்வாகம் மீண்டும் அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top