விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு..!!

tubetamil
0

 மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் நேற்று (02) மதியம் 1.30 மணியளவில் இந்த விடுதிக்கு வந்து, மாலை 6 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டு அறையை ஆய்வு செய்தபோது, ​​சம்பந்தப்பட்ட இளைஞன் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி, மஹரகம பொலிஸ் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து சோதனையிட்ட போது, ​​ஹோமாகம பகுதியில் விஷம் அருந்தி உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்குக்கு இந்த நபர் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் மேற்கூறிய நபரை பின்பற்றுபவர் என்பதும் அவரது பிரசங்கங்களில் கலந்து கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறந்த இடத்தில் விஷம் அடங்கிய பை, தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top