நன்றி நவிலும் மனித நேயத்தின் உயர்ந்த பண்பை உலகத்திற்கு பறைசாற்றுகிறது..!!

tubetamil
0

 சகோதர இலங்கை வாழ் இந்து சமூகத்திற்கு இனிய தைப்பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரர தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

ஆசிய விவசாய சமூகத்தில் தெய்வமாக கருதப்படுவது சூரிய பகவானாகும் .
சூரிய வழிபாட்டினை முன்னிலைப்படுத்தி இடம் பெறும் தைப்பொங்கல் பண்டிகையின்
அனைத்து சடங்குகளும் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்துகிறது.

தைப்பொங்கல் பண்டிகையானது நன்றி நவிலும் மனித நேயத்தின் உயர்ந்த பண்பை உலகத்திற்கு பறைசாற்றுகிறது.

விவசாய நடவடிக்கைகளை வெற்றி பெற உதவிய கால்நடை விலங்குகளுக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்தும் ஒர் கலாசார பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

உலகளாவிய இந்து சமூகத்துடன் ஒன்றிணைந்து தைப்பொங்கலை கொண்டாடும் இலங்கை வாழ் இந்து மக்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

விசேடமாக எமது தாய் நாடு மற்றுமொரு சவால் மிக்க ஆண்டில் தடம் பதிக்கும் சந்தர்ப்பத்தில், மலரும் புத்தாண்டு அனைத்து விதத்திலும் அதிஷ்ட மிக்க ஆண்டாக அமைய இத்திரு நாளில் பிரார்த்திக்கிறேன்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top