கருணாவை நம்பினால் காப்பாற்ற முடியாது..!!

tubetamil
0

 தமிழ் மக்களின் இருப்பை அழித்தே வந்த கருணா தான் பாதுகாக்க போகின்றாரா எனக் கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  அவரை தமிழ் மக்கள் நம்பினால் கடவுளாலும் தமிழ் மக்களை காப்பாற்ற முடியாது என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் உள்ளிட்டவர்களை, மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு வெள்ளிக்கிழமை (19) சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மாவீரர் வாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் இருக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் ஜனநாயக போராளி அமைப்பின் நகுலேஸ் ஆகியோரை  சந்தித்தேன்
 

நகுலேஸூக்கு எதிரான வழக்கு அறிக்கை, சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் சார்ந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தா.ர்  அந்தவகையில் அடுத்து வழக்கு தவனைக்கு முன்னர் பிணையில் விடுவிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும். அதேவேளை எமது கட்சி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் தனுஜனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு  கடந்த வாரம் விசாரணை செய்து அதனை அறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளதாக   சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

 பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டுவரமுடியாத விடயங்கள் அந்த பி அறிக்கையில் சட்டவிரோதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.  சட்டத்தின் கீழே குற்றங்களாக கருதமுடியாத காரணங்களை வைத்து அந்த வழக்குகளை தொடரமுடியாது அவ்வாறான நிலையில் இரண்டு மாதங்களாக சிறைச்சாலையில் அடைத்துவைத்திருப்பது ஓர் அடிப்படை மனித உரிமை மீறல்.

அது மட்டுமல்ல ஸ்ரீ லங்கா அரசாங்கத்துடைய உண்மையான இனவாத நிகழ்ச்சி நிரல் இரட்டை வேடத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.  அதாவது நினைவு கூறலாம் என உலகத்துக்கு சொல்லிக் கொண்டு நல்ல பிள்ளையாக நடித்துக் கொண்டு  மறுபக்கம் நினைவு கூறியவர்களை கைது செய்து அவர்களை பழிவாங்கும் கோணத்தில் செயற்படுவதை உலகத்திற்கு தெரியப்படுத்துவோம்.

அதேவேளை, அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த விடயங்களை வருகின்ற மார்ச் மாதம் இடம்பெறும்  மனித உரிமை பேரவையில் அம்பலப்படுத்தி அதனை நேரடியாக பதிவு செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top