பூநகரி - பள்ளிக்குடாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி சுற்றி வளைப்பில் ஈடுபட்ட பொலிஸார் பூநகரி பள்ளிக்குடாவில் கேரள கஞ்சா 02 கிலோ 100 கிராமுடன் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
பூநகரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட 43 வயதுடைய நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.