பப்புவா நியூகினியின் வடக்கு மலைப் பிராந்தியத்தில் பழங்குடியினருக்கு இடையிலான வன்முறையில் குறைந்தது 64 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்புலின் மற்றும் சிக்கின் பழங்குடியினர் மற்றும் அவர்களின் கூட்டணியினருக்கு இடையிலான மோதலுக்கு இடையில் கடந்த ஞாயிறு (18) காலை இந்த கொலைகள் இடம்பெற்றிருப்பதாக உள்ளூர் பொலிஸாரை மேற்கோள்காட்டி அந்நாட்டு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.வபனாமன்டா பகுதியின் வீதி ஓரங்கள், புல் நிலங்கள் மற்றும் மலைப் பகுதிகளில் இருந்து நேற்றுக் காலை சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போட்டி தரப்பினர் அதிக சக்தி வாய்ந்த துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கும் நிலையில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நிலம் மற்றும் செல்வ பகிர்வு தொடர்பிலேயே பழங்குடியினர் இடையே மோதல் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.