இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு ஜப்பானும் இந்தியாவும் கூட்டு இராணுவ பயிற்சியை ஆரம்பித்துள்ளன.
ஜப்பானின் தற்காப்பு படையினரும் இந்திய இராணுவமும் ராஜஸ்தானிலுள்ள மஹஜன் சுடுகள இராணுவ தளத்தில் ஆரம்பித்துள்ள இக்கூட்டுப்பயிற்சி மார்ச் மாதம் 09 திகதி வரை இடம்பெறவுள்ளது.
இப்பயிற்சியின் ஊடாக இரு நாட்டு படையினரதும் ஒத்துழைப்பையும் ஒருங்கிணைந்த திறன்களையும் மேம்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் பொதுத் தகவல்களுக்கான மேலதிகப் பணிப்பாளர் நாயகம் இக்கூட்டுப்பயிற்சி தொடர்பில் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, இந்தியாவிலும் ஜப்பானிலும் வருடா வருடம் நடாத்தும் கூட்டுப் பயிற்சி இது.
இப்பயிற்சியில் இரு தரப்பிலும் 40 படை வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.