புனர்வாழ்வு பெறுவோர் குழப்பங்கள் ஏற்படுத்தினால் இனி விளக்கமறியல்..!!

tubetamil
0

 புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் புனர்வாழ்வு பெறும் கைதிகள் இதற்குப் பின்னரும் குழப்பங்களை தூண்டினால், அங்கிருந்து அவர்கள் நீக்கப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்படுவரென நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு, சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வெலிக்கந்தை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப் பொருள் வர்த்தகர்கள் குழு பிரவேசித்து, அங்கு தொடர்ச்சியாக குழப்பகரமான சூழ்நிலையை உருவாக்கி வருவதுடன் மோதல்களுலும் ஈடுபட்டு வருகின்றனனர். இவ்வாறானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை விளக்கமறியலில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வு பெற்று வருவோரை குழப்பி, அரசாங்கம் மேற்கொண்டுள்ள புனர்வாழ்வு வேலைத் திட்டத்தை சீர்குலைப்பதே போதைப் பொருள் வர்த்தகர்களின் நோக்கம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top