கனேடியத் தூதுவருடன் சிறீதரன், சாள்ஸ் எம்.பிக்கள் சந்திப்பு..!!

tubetamil
0

 இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் எம்.பி ஆகியோர் கனேடியத் தூதுவரை சந்தித்துள்ளனர். இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் அழைப்பின் பேரில், நேற்று முன்தினம் (13) கனேடியத் தூதுவர்

எரிக் வோல்ஸை கொழும்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இவர்கள்,நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இச்சந்திப்பில் கனேடியத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் டேனியல் வூட், அரசியல் அலுவலர் கணேசநாதன் சாகித்தியனன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரன் எம்.பிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர்,  தமிழர்களின் அரசியல் நலன்சார்ந்து முன்னெடுக்கவுள்ள செயற்பாடுகளுக்கு தம்மாலான பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top