எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக, இராணுவ உறுப்பினர்கள், அவர்களின் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நலன்புரி அறக்கட்டளையில் உறுப்புரிமைப் பெற்றுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் தீவிர அறுவைச் சிகிச்சைகள் மற்றும் தீவீரமற்ற அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்ள ‘கேஸ்லெஸ் மெடி கிளைம்’ எனும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இத்திட்டத்தின் கீழ், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 33 தனியார் வைத்தியசாலை வலையமைப்புகளின் ஊடாக, இன்று முதல், இராணுவ உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி நிதியத்தில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற போர் வீரர்களும் இந்த வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும்.