அமெரிக்காவில் பேரணி மீது துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி..!!

tubetamil
0

 அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் சுப்பர் போல் விளையாட்டு நிகழ்ச்சிக்கு பின்னர் இடம்பெற்ற மக்கள் பேரணி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் மூவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்றுதிரண்டிருந்த பேரணி முடிவில் கென்சாஸ் நகரின் ரயில் நிலையத்தில் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

தமது தொகுப்பாளர் ஒருவரான லீசா லோபஸ் என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக உள்ளுர் வானொலி நிலையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இதில் ஆறு தொடக்கம் 15 வயது கொண்ட ஒன்பது சிறுவர்கள் துப்பாக்கி காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top