“ஃபிளமிங்கோ” வலசை பறவைகள் மன்னார் பகுதியில் காணப்படுகிறது. இங்கு உணவு கிடைப்பது, வானிலை மற்றும் இனப்பெருக்க ஜோடிகளைத் தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல காரணங்களால் தங்கள் நாட்டிலிருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதாக அறியப்படுகிறது.
இவ்வாறு இடம்பெயரும் பறவைகளுள், மிகவும் அரிதான மற்றும் மிகவும் உணர்திறன் கொண்ட பறவை ஃபிளமிங்கோ ஆகும். தற்போது அவை அனைத்தும் மன்னாரில் குவிந்துள்ளன.
இடம்பெயர்ந்த காலம் எப்போதுமே பார்வையாளர்களுக்கு ஒரு உற்சாகமான நேரமாக உள்ளது, அவர்கள் மன்னாரின் ஈரநிலங்களில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக செலவழிக்கும் அழகான மற்றும் கம்பீரமான ஃபிளமிங்கோ பறவைகளை ஓய்வு நேரத்தில் பார்க்கவும், புகைப்படம் எடுக்கவும் இணையற்ற வாய்ப்பைப் பெறுகிறார்கள்.இந்த வகை பறவைகள் நவம்பரில் மாதம் முதல் ஏப்ரல் வரை தங்கியிருக்கும். அவைகள் இலங்கைக்கு மட்டுமன்றி, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கும் இடம்பெயர்கின்றன.
ஃபிளமிங்கோ பறவைகளை புகைப்படம் பிடித்த வனவிலங்கு புகைப்பட கலைஞர் ஏ.எல் முஹமட் ரசீம் தெரிவிக்கையில்,
மன்னாரில் தற்போது சுமார் 3,000 க்கும் அதிகமான ஃபிளமிங்கோ பறைவைகளை என்னால் அவதானிக்க கிடைத்தது. ஆனால் பல ஆண்டுகளாக எண்ணிக்கையில் தெளிவான ஏற்ற இறக்கத்தை காணக்கூடியதாக உள்ளது. “2012 இல், 12,000 ஃபிளமிங்கோ பறவைகள் இருந்தன, ஆனால் அது 1,500 ஆகவும் குறைந்து பின்னர் 7,000 ஆக உயர்ந்தது. பின்னர் சென்ற வருடம் 3,000 தெடக்கம் 5,000 வரை இருந்தது. தற்போது அது 3,000 ஃபிளமிங்கோ பறவையாக உள்ளது.”
அந்த வகையில் இந்த ஃபிளமிங்கோ பறவைகளை காண அதிமான வெளிநாட்வர்கள் வந்துள்ளனர். இந்த வருடம் பல நாட்கள் நான் மன்னார் சென்று இந்த புகைப்படங்களை எடுத்து வருகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.