யாழில். போதைக்கு எதிராக ஒன்று கூடிய மதகுருமார்கள்..!!

tubetamil
0

 போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று நேற்று(13) மாலை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

“போதைப்பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் யாழ். மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில மத தலைவர்கள் கலந்துகொண்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top