மகன் துப்பாக்கிச் சூடு; குற்றவாளியானார் தாய்..!!

tubetamil
0

 பாடசாலையில் தனது மகனின் துப்பாக்கிச் சூட்டை தடுப்பதற்கு தவறியதாக அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் குற்றங்காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் தனது குழந்தையினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்காக குற்றங்காணப்படும் முதல் தாயாக 45 வயது ஜெனிபர் கிரம்ப்லி பதிவாகியுள்ளார்


.

தனது மகன் துப்பாக்கி வைத்திருந்ததற்கு அனுமதித்தது மற்றும் அச்சுறுத்தல்களை அலட்சியம் செய்ததாக வழக்குத் தொடுநர்கள் ஜெனிபர் மீது குற்றம்சாட்டினர். இது தொடர்பில் அவரது கணவரும் தனியாக வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார்.

கடந்த 2021 நவம்பர் மாதம் மிச்சிகனில் உள்ள ஒக்ஸ்போர்ட் உயர் பாடசாலையில் தனது சக வகுப்பறை மாணவர்கள் நால்வரை சுட்டுக் கொன்றதற்கு இவர்களது 17 வயது மகன் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார்.

விருப்பாற்றலுக்கு உட்படாத நான்கு கொலைகளில் ஈடுபட்டதாகவே ஜெனிபர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top