பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தம் இன்று (29) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
சம்பளப் பிரச்சனையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக் காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த விடயத்தில் இரண்டு வாரங்களுக்குள் தீர்வு காணப்படாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என பல்கலைக்கழக நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசகர் சம்பத் உதயங்க தெரிவித்துள்ளார்.
நேற்று (28) ஆரம்பிக்கப்பட்ட இந்த அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.