பெந்தோட்டை பொலிஸாருக்குகிடைத்த தகவலின் அடிப்படையில் பெந்தோட்ட வராஹேன பிரதேசத்தில், வீதியில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்த 17 வயதான இளைஞனிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வகை கைத்துப்பாக்கி மற்றும் 5,580 மில்லிகாரம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட துப்பாக்கி ஏதேனும் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடையதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (3) பிற்பகல் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பெந்தோட்டை அங்ககொட பகுதியைச் சேர்ந்வர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை பலபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணைகளுக்காக ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கவுள்ளதாக பெந்தோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷாரகரி தெரிவித்தார். ள்ளனர்.