நெல்லியடி மத்திய கல்லூரியில் ஊடக கழக தொடக்க விழா..!!

tubetamil
0

 யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரியின் ஊடக கழக தொடக்க விழா இன்று காலை 7:45 மணியளவில் பாடசாலையின் ஊடக கழக தலைவன்  செல்வன் ஜோய் ஜொய்சன் தலமையில் இடம் பெற்றது.


இதில் முதல் நிகழ்வாக பிரதம விரைந்தனர், சிறப்பு, கௌரவ விருந்தினர்கள் மலர்மாலை அணிவிக்கப்பட்டு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டது.

மங்கல சுடர்களை நிகழ்வின் பிரதம விருந்தினர் கவிஞர் முல்லை திவ்யன், சிறப்பு விருந்தினரும் ஒளியருவி நிறுவன உரிமையாளர் பிரபாகரன், பாடசாலை அதிபர் க.கிருஸ்ணகுமார், கல்லூரி பிரதி அதிபர் தயாளினி ஆபிரகாம், உப அதிபர்களான திருமதி தேவகி இந்திராஸ், திருமதி சுபாஜினி விஜேந்திரன், ஊடக கழக பொறுப்பாசிரியர் ப.கங்காதரன், மாணவ முதல்வன் செல்வன் p. பிரதீபன் ஆகியோர் ஏற்றிவைத்ததை தொடர்ந்து  வரவேற்பு உரை, தலமையில் உரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து கருத்துரைகளை பாடசாலை பழைய மாணவர் சங்க தலைவர் மருத்துவ கலாநிதி வே.கமலநாதன்,  கல்லூரி ஊடக கழக பொறுப்பு ஆசிரியர் ப.கங்காதரன், கல்லூரி அதிபர் க.கிருஸ்ணகுமார்,  நிகழ்வின் பிரதம விருந்தினரும், எழுத்தாளர், கவிஞர், முல்லை திவ்யன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இதில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top