ஒரே குடும்பத்தினர் பயணித்த ஆட்டோ கோர விபத்து, தாய் பலி..!!

tubetamil
0

 ஹொரணை – பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்து, இருவர் காயமடைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த முச்சக்கர வண்டியே, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் மோதி விபத்துக்குள்ளான தாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரகம, ரைகம கொஸ்வத்தபர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி என்ற 40 வயது பெண்ணே, விபத்தில் உயிரிழந்துள்ளார். தமது மகளின் தேவைக்காக ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையிலே, இவ்விபத்து இடம்பெற்றது.இவர்களை,பிரதேசவாசிகள் இணைந்து வைத்தியசாலையில் அனுமதித்தனர்.


எனினும்,அங்கு தாய் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

காயமடைந்த சிறுமியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.தந்தையின் வலது கை, கழுத்து மற்றும் மார்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top