பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.