யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அலுவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட நபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(21) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காரைநகரில் இருந்து காவு வண்டியில் கொண்டுவரும் போது உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை விரைவாக தருமாறு வைத்தியசாலையின் மேற்பார்வையாளர் அலுவலகத்திற்கு சென்று தகாத வார்த்தைகளை பேசி சந்தேகநபர் முரண்பட்டுள்ளார்.
மேலும், அலுவலகர்களுடனும் முரண்பட்டு அங்கிருந்த பெயர் பலகையையும் சேதப்படுத்திய நிலையில் வைத்தியசாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, கைது செய்யப்பட்டவர் மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சந்தேக நபரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.