வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் உள்ளிட்ட 15 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.