தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக அங்கீகரித்த போது வாக்களிக்காமல் விலகிய அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உறுதியான தீர்மானத்திற்கு வர முடியாத பட்சத்தில் அந்த இரண்டு உறுப்பினர்களும் அரசியலமைப்பு சபையில் இருக்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அளுத்கமகே தெரிவித்துள்ளார்.அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் இப்போது நடந்துகொள்வது போல் தொடர்ந்தும் நடந்து கொண்டால் அதை கலைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அவர் கூறினார்.