தமிழக மீனவர்கள் 21 பேர் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது..!!

tubetamil
0

 இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நீரியல்வள திணைக்களத்தினர் அவர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top