வடக்கில் 73,000 மரக்கன்றுகள் நாட்டும் செயற்திட்டம்..!!

tubetamil
0

 வடக்கில் 73,000 மரங்கன்றுகளை நாட்டும் செயற்திட்டத்தை இலங்கை விமான படையினர் முன்னெடுத்துள்ள நிலையில் , வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ்க்கு விமான படை அதிகாரி தென்னங்கன்று ஒன்றினை வழங்கி வைத்துள்ளனர்.

இலங்கை விமான


படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு வடமாகாணத்தை மையப்படுத்தி “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று (06) விமான படையின் “தொழினுட்பம் , கல்வி மற்றும் அபிவிருத்தி” எனும் தொனிப்பொருளில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது.

கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த வடமாகாண ஆளுநரிடம் உத்தியோகபூர்வமாக தென்னங்கன்று ஒன்று விமான படையினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை “ எனது புத்தகமும் வடக்கில்” எனும் தொனிப்பொருளில் 73,000 புத்தகங்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top