முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் இராணுவ புலனாய்வு அதிகாரி மற்றும் இளைஞன் கைது..!!

tubetamil
0

 முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் நேற்று கேரளா கஞ்சாவுடன் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞன் ஒருவரையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.


குறித்த சம்பவம் நேற்று (09.03.2024) பிற்பகல் 12.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக மேற்கொள்ள சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 10 கிராம் கஞ்சாவுடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தேராவில் தேக்கங்காடு இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்த 40 வயதுடைய சார்ஜன் மேஜரையும், உடையார்கட்டு தெற்கினை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனையும் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரையும் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்திய போது இருவரிடமும் போதைபாவனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top