வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது..!!

tubetamil
0

 வடமாகாண மாகாணத்தின் வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி முதலிடமும் பெண்கள் பிரிவில் யாழ் மாவட்டம் முதல் இடத்தையும் பெற்றுள்ளது. 


வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் ஏற்பாட்டில்  வட மாகாண ரீதியான  வேக நடை போட்டி கிளிநொச்சியில் நடைபெற்றது.ஐந்து மாவட்டங்களிலும்  மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட  ஆண்,பெண் சேர்ந்து 31 பேர் கலந்து கொண்ட 20 கிலோ மீட்டர் தூர வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த கண்ணன் கலையரசன்  அவர்கள் சுமார் 2.15.08 நேரத்தில் நடந்து முடித்துள்ளார். இதேபோன்று பெண்கள் பிரிவில்  யாழ் மாவட்டத்தை சேர்ந்த ரவிக்குமார் கெளசிகா அவர்கள் சுமார் 2.18.59 நேரத்தில்  நடந்து முடித்துள்ளார்கள்.

2013, 2014 ஆண்டுகளில் வட மாகாண ரீதியான  வேக நடை போட்டியில் ஆண்கள் பிரிவில்  1.52 ஒரு மணித்தியாலத்தில் ஐம்பத்து இரண்டு நிமிடத்திலும் பெண்கள் பிரிவில் இரண்டு மணித்தியாலயத்தில் 11 நிமிடத்தில் நடந்து முடிக்கப்பட்ட வேகத்தை 2024 ஆண்டு வேக நடை போட்டியாளர்களால் முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top