பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான ஹரிஹரன் தன்வந்த் சாதனை படைத்துள்ளார். அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனுஷ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது.
சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை 8 மணி, 15 நிமிடத்தில் கடந்து குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார்.
இச்சிறுவன் இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.