சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவன் விபத்தில் பலி..!!

tubetamil
0

 சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை ஐயா கடை சந்திப் பகுதியில் இன்று (01) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 18 வயதான சிவநாவலன் பரணிதரன் என்ற மாணவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இ.போ.ச பஸ் பாடசாலையில் விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு சைக்கிளில் வீடு திரும்பிய மாணவனை மோதியதில் மாணவன் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதே உயிரிழந்துள்ளார்.

இதன்போது மாணவன் பயணித்த சைக்கிள் பல துண்டுகளாக சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விபத்திற்கு காரணமாக பஸ் சாரதியை கைது செய்த சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top