ஊவா வெல்லஸ்ஸ பல்கலையில் புதிதாக மருத்துவ பீடம் ஆரம்பம்..!!

tubetamil
0

 ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் புதிதாக மருத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக 50 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். உடற்கூறியல் கற்கை பீடமும் திறக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்களுக்கான தங்குமிட கட்டடத்துக்கான நிர்மாணப்பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் வைபவம் பதுளை நூலக கேட்போர் கூடத்தில் கடந்த (22) நடைபெற்றது. இந்நிகழ்வில் விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, ஊவா பல்கலைக்கழக வேந்தர் கலாநிதி ஜயந்த பலவர்தன, உபவேந்தர் பேராசிரியர் கோலித பண்டார விஜேசேகர மற்றும் மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இவ்வைபவத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றுகையில், ஊவா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை அமைக்க வேண்டும் என்பது பல்கலைக்கழகம் தொடர்பிலான கனவுகளில் ஒன்று அது இன்று நனவாகியுள்ளது. வரலாற்றிலிருந்து பிரதச மக்கள் சமூக அநீதிகளை அனுபவித்துவந்துள்ளனர். அநீதிக்கு ஆளான மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கமாகும் என்று தெரிவித்தார்.இன்று ஆரம்பமாகிவுள்ள மருத்துவ பீடத்துடன் பதுளை வைத்தியசாலை யும் போதனா வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 600 உள்நோயாளிகளுக் கான படுக்கைகளுடன் கூடிய வாட் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட 14 ஆவது பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் 2005 ஆம் ஆண்டு மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top