யாழில் காவல்துறையினரை தாக்கிய கடத்தல்காரர்கள்! ஒருவர் தப்பியோட்டம்

keerthi
0


 யாழ் காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை கடமையில் இருந்த சாவகச்சேரி போக்குவரத்து காவல்துறையினர் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்து கனரக வாகனத்தை துரத்திச் சென்ற காவல்துறையினர் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர்.


இதன்போது சாரதி மற்றும் கனரக வாகனத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட மூவரும் இணைந்து காவல்துறையினர் மீது இரும்பு கம்பிகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது போது நகரப் பகுதியில் கடமை இருந்து காவல்துறையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்திய மணல் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்தனர். எனினும் டிப்பர் வாகனத்திற்கு முன்பாக வழிகாட்டி வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை கைவிட்டு விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதனையடுத்து மணல் கடத்தி வரப்பட்ட டிப்பர் வாகனத்தையும் மோட்டார் சைக்கிளையும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 

  அத்தோடு    தப்பிச் சென்றவரை கைது செய்ய சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top