யாழ்ப்பாணம் – இளவாலை , சேந்தான்குளம் கடலில் நீராடியவர்களில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த 21 வயதான சிவநேசன் திவ்யன் மற்றும் வவுனியா செட்டிக்குளம் பகுதியை சேர்ந்த 36 வயதான தேவன் கருணாதாசா ஜூட்ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.
யாழ்.நகர் பகுதியில் இருந்து மூவர் நேற்று (20) மாலை சேந்தான்குளம் பகுதிக்கு சென்று , கடலில் நீராடியுள்ளனர். அதன் போது இருவர் கடலில் அடித்து செல்லப்பட்டனர்.
கடலில் அடித்து செல்லப்பட்டவர்களை , அப்பகுதியில் நின்றவர்கள் மீட்க முயற்சித்த போதிலும் , அவர்களை மீட்க முடியவில்லை.
நீண்ட தேடுதலின் பின்னர் , சில மணிநேரத்தில் கடலில் அடித்து செல்லப்பட்ட இருவரும் சடலமாக கரை ஒதுங்கினார்கள்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து இளவாலை பொலிஸார் சடலத்தை , மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைகயில் ஒப்படைத்துள்ளனர்.