தென் சீனக் கடலில் உள்ள தனது விநியோகப் படகு ஒன்றில் சீனாவின் கடலோர காவல்படை தாக்கல் நடத்தியதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் கூற்றுப்படி, இந்த மோதல் சுமார் ஒரு மணிநேரம் நீடித்தது. சீன கடலோரக் காவல்படை எனக் குறிக்கப்பட்ட ஒரு வெள்ளைக் கப்பல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக பிலிப்பைன்ஸ் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸின் ஆயுதப் படை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதோடு, ” சீன தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கப்பலுக்கு உதவியாகச் சென்ற விநியோகப் படகிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் , ” சீள கப்பல்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி நடத்தப்பட்ட தாக்குதலினால் விநியோகப் படகு பலத்த சேதம் அடைந்தது.”
இதற்கிடையில், சீன கடலோர காவல்படையின் செய்தித் தொடர்பாளர் கான் யூ, பிலிப்பைன்ஸ் கான்வாய் “சீனா பலமுறை எச்சரித்ததையும் மீறி வலுக்கட்டாயமாக அப்பகுதிக்குள் குறித்த படகு ஊடுருவியது. சட்டத்திற்கமையவே சீனா இந்த தாக்குதலை நடத்தியதாக” என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடந்த மிக அண்மைய சம்பவம் இது. 2016 ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றம் இந்த கடல் எல்லை தொடர்பில் தீர்ப்பொன்றை வழங்கியிருந்த போதும் தென்சீனக் கடலுக்கும் சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது. இதற்கிடையில், வியட்நாம், புருனே மற்றும் மலேசியா போன்ற தனது கடற்கரையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை பிலிப்பைன்ஸ் உரிமை கொண்டாடுகிறது. தாய்வானும் இக்கடல் பகுதிகளுக்கு உரிமை கோரியுள்ளது.
பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடனான தனது இராணுவ உறவுகளை விரிவுபடுத்தியுள்ளது. மூலோபாய நீர்நிலைகளில் அமெரிக்கா உரிமை கோரவில்லை. கடல் விவகாரத்தில் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, பிலிப்பைன்ஸிற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பு “இரும்புக் கவசமானது” என்று அல் ஜசீரா தெரிவித்துள்ளது.