15 வயது பாடசாலை மாணவனின் வீரச் செயல்..!!

tubetamil
0

 கிணற்றில் இருந்த மீன்களை பிடிப்பதற்காக குதித்து நீரில் மூழ்கிய சிறுவனை காப்பாற்றிய 15 வயது பாடசாலை மாணவன் தொடர்பான செய்தியொன்று புத்தளம் மஹகும்புக்கடலை உப்பள கிராமத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

புத்தளம், மஹகும்புக்கடலை, உப்பளம் இலக்கம் 4 கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ஆகாஷ் நெதுமின என்ற சிறுவனே கிணற்றில் விழுந்துள்ளார்.


கிணற்றில் தண்ணீர் கலங்குவதைக் கண்டு சசிந்து நிம்சர என்ற பாடசாலை மாணவன் கிணற்றில் குதித்து குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில் கூச்சலிடம் சத்தம் கேட்டு விரைந்து சென்ற சசிந்து, சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதை தெரிந்து கொண்டு உடனடியாக கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

சசிந்துவின் வீரச் செயலில்லாமலிருந்தால் அந்த குட்டி மகன் உயிரிழந்திருப்பார் என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.  

36 அடிக்கு மேல் ஆழமுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்துள்ளதுடன், அதன் பக்கவாட்டு சுவர்கள் மழை காரணமாக கிணற்றுக்குள் இடிந்து விழுந்துள்ளது.

நீரில் மூழ்கிய சிறுவன் சசிந்துவின் வீட்டிற்கு வழமையாக வந்து செல்வதாகவும், சசிந்துவின் வீட்டில் சாப்பிட்டு விட்டு தனது வீட்டுக்கு செல்லும் போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சசிந்து கூறுகையில்,

தம்பிக்கு நான் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தேன். அவர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்வதாய் கூறி விட்டு சென்றார்.
நான் சமையல் அறைக்குச் சென்று கோப்பையை கழுவி விட்டு வௌியே வரும் போது, சசிந்து அண்ணா என்று சத்தம் கேட்டது. நான் உடனடியாக கிணறு இருக்கும் பக்கத்திற்கு சென்று பார்த்தேன். அப்பொழுது தம்பி கிணற்றில் மூழ்குவதை கண்டு, உடனடியாக கிணற்றில் குதித்தேன். பின் மேலே வந்த தம்பியை பிடித்துக் கொண்டேன். அத்தோடு அருகில் இருந்து மோட்டாருக்கான குழாயை பிடித்துக் கொண்டு சத்தமாக கத்தி உதவி கோரினேன். பின்னர் தம்பியின் அம்மாவும் ஏனையோரும் வருந்து எங்களை காப்பாற்றினர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top