வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் மருத்துவர் அர்ச்சுனா..!!

tubetamil
0

   யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் அருச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

நாடாளுடன்றத்திற்கு பேச்சுக்கு வருமாறு கூறியதை அடுத்து அவர் மருத்துமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுகின்றது.யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அதியட்சகர் அருச்சுனா- இராமநாதனை இடமாற்றம் செய்ய மருத்துவ மாபியாக்கள் முயல்வதாக தெரிவித்து, தென்மராட்சி மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.இந் நிலையில், போராட்டக்காரர்கள் 5 பேரை மருத்துவமனை தங்கும் விடுதிக்கு அழைத்து பேச்சு நடத்திய போதே இதனை தெரிவித்தார்.


மருத்துவமனை சிக்கலை சுமுகமாக தீர்க்க பொலிசார் தீவிர முயற்சியெடுத்த நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.தன்னை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக மீண்டும் நியமித்தால், மீண்டும் அதை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.அவ்வாறு , இல்லையெனில் மருத்துவ சேவையிலிருந்து விலகி வெளிநாடு செல்வதை பற்றி யோசிப்பதாகவும் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியாக கடந்தமாதம் கடமையேற்ற மருத்துவர் அருச்சுனா இராமநாதன் , வைத்தியசாலையில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், அங்கு இடம்பெற்ற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தியதுடன், 4 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவரை வெளியேற்ற பல சதிகள் இடம்பெற்றதுடன், நேற்றிரவு அவரை கைது செய்ய பொலிஸார் முறபட்டபோது தென்மராட்சி மக்கள் மருத்துவருக்கு ஆதரவாக திரண்டு அதனை தடுத்ததுடன், இன்றும் போராட்டத்தை முன்னெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top